தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது நடிப்பாலும், அழகாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ள இவர், தற்போது தனது காதல் மற்றும் திருமணம் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
திருமணம் என்பது வெறும் மோதிரம் அணிவிப்பதோடு முடிந்துவிடுவதில்லை என்றும், இருவர் இணைந்து வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதே உண்மையான திருமணம் என்றும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
“எங்களைப் பொறுத்தவரை, திருமணம் என்பது மோதிரம் அணிவிப்பது மட்டுமல்ல. ஒன்றாக வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதாகும். இதுவரை நாங்கள் அதை அழகாகச் செய்து வருகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது வாழ்க்கைத் துணையாகவும், நண்பராகவும், எதிர்காலத்தில் தனது குழந்தைகளின் தந்தையாகவும் இருக்கப்போகும் நபர் மீது காதல் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், “அவருடன் முதுமை அடைவதையும் ஆயிரம் முறை தேர்ந்தெடுப்பேன்...” எனத் தனது காதல் குறித்த உறுதியான கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ராஷ்மிகாவின் இந்தக் கருத்துக்கள், காதல் மற்றும் திருமணம் தொடர்பாக அவருக்கு எழுந்த விமர்சனங்களுக்கான பதிலாகப் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, வாழ்க்கைத் துணையுடன் இணைந்து எதிர்காலத்தை உருவாக்குவது குறித்த அவரது பார்வை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனால், அவரது காதல் மற்றும் திருமணம் குறித்த இந்தப் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
Listen News!