பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே கவனம் பெற்ற நடிகைதான் ஜனனி. இவர் இலங்கையை சேர்ந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.
இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஜனனி தனது வாழ்க்கை அனுபவங்கள், சினிமா பயணம், மற்றும் தனிப்பட்ட சவால்கள் குறித்து பேட்டியொன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, பிக் பாஸ் அனுபவம் தனக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்ததாகவும், அதற்குப் பிறகு சமூக வலைதளங்களில் சிலருடன் தொடர்பை குறைத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் யாரையும் முழுமையாக பிளாக் செய்யவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சூட்டிங் ஸ்பாட் மற்றும் பிக் பாஸ் ஹவுஸ் அனுபவங்களை ஒப்பிட்டு பேசும்போது, “சூட்டிங்கில் வேலை எளிது, ஆனால் பிக் பாஸ் வாழ்க்கை மனதளவில் சவாலானது” என அவர் கூறினார்.

அதேபோல் சில நடிகர்கள் குறித்து கேட்ட கேள்விகளுக்கும் அவர் நேர்மையாக பதிலளித்தார். “யாருடனும் பெரிய பிரச்சனை இல்லை, எல்லாரும் தொழில்முறை நட்பு தான்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
பணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், வாழ்க்கையில் நம்பிக்கை வைத்து செயல்பட்டபோது சுமார் 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக கூறி அதிர்ச்சியளித்தார்.
“நல்ல மனசு காரணமாக சிலர் சொன்னதை நம்பி ஏமாந்தேன்” என்றும், ஆனால் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இரவு நேரங்களில் தனியாக இருக்கும்போது பயம் ஏற்படுவதாகவும், வீட்டில் விளக்குகளை எப்போதும் எரியவைத்து தூங்கும் பழக்கம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதேபோல், சில நேரங்களில் மனஅழுத்தம் மற்றும் தனிமை உணர்வு ஏற்பட்டதையும் அவர் பகிர்ந்துள்ளார். ஆங்கராக தொடங்கி நடிகையாக உயர்ந்த தனது பயணத்தைப் பற்றி பேசும்போது, “இது என் கனவுப் பயணம்” என அவர் கூறினார்.
அவர் நடித்த புதிய படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய வகையில் உருவாகியுள்ளதாகவும், அதில் வலுவான சமூக செய்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டி ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது. பிக் பாஸ் அனுபவம், தனிப்பட்ட வாழ்க்கை சவால்கள், மற்றும் சினிமா பயணத்தின் உண்மை நிலை ஆகியவை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
Listen News!