• Dec 26 2024

பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்வது உண்மை தானா?- கோபமாக விளக்கம் கொடுத்த நாகசைத்தன்யா

stella / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யா தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். நாக சைதன்யா ஜோஷ், ஏ மாயா சேசவே, 100% லவ், பிரேமம், வெங்கி மாமா, லவ் ஸ்டோரி, பங்கர்ராஜூ, லால் சிங் சத்தா மற்றும் பல போன்ற பல்வேறு பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.

ஏ மாயா சேசவே படத்தில் நடித்தப்போது நடிகை சமந்தாவை காதலித்தார் நாக சைதன்யா. பின்னர் இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.


நாக சைதன்யா விவாகரத்து பெற்ற பின்னர், பிரபல நடிகை சோபிதா துலிபாவை காதலிப்பதாக செய்திகள் வெளியானது.இதுகுறித்து நடிகை ஒரு பேட்டியில், உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நான் எந்த தவறும் செய்யாதபோது, அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும் என கோபமாக பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement