இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் திரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான குறுகிய காலத்திலேயே மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த படம் உலகளவில் இதுவரை 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மெகா ப்ளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. முன்னதாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், இந்த முறை அவர் சூர்யாவுடன் இணைந்து புதிய கமர்ஷியல் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.ஜே. பாலாஜி, ‘கருப்பு 2’ குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், கருப்பு படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இது தனது முதல் பெரிய வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சூர்யாவை சமீபத்தில் மும்பையில் சந்தித்ததாகவும், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறியுள்ளார். படத்தின் வெற்றிக்காக சூர்யாவிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘கருப்பு 2’ குறித்து கேள்வி எழுந்தபோது, “ரோலிங் சூன்” என முன்பே குறிப்பிட்டுள்ளதை நினைவூட்டி, ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவால் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மொத்தத்தில், ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றி தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
Listen News!