பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், அரசி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோது கார்த்திகேயன் அங்கு வந்து அவருடன் பேசுகிறார். இருவரும் சிரித்துப் பேசுவதை பார்த்த குமார் சந்தேகமடைந்து அரசியிடம் விசாரிக்கிறார். ஆனால் அரசி, குமாரிடம் கடுமையாக பதிலளித்து அவரை அங்கிருந்து அனுப்புகிறார்.
பின்னர் கார்த்திகேயன் அங்கிருந்து சென்றதும், குமார் அவரை பின்தொடர்கிறார். அதே நேரத்தில் முத்துவேல் மற்றும் கதிர் தோட்டத்துக்குச் செல்கிறார்கள். அங்கு பணம் கொடுப்பதற்காக முத்துவேல் வந்திருப்பது தெரியவருகிறது.
இதற்கிடையில் அங்கு வந்த குமார், கதிர் மற்றும் முத்துவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். வாக்குவாதம் தீவிரமடைந்து கைகலப்பாக மாறியதில், குமார் தள்ளிவிட்டதில் முத்துவேல் அருகிலிருந்த கல்லில் தலையடித்து மயங்குகிறார்.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்பான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

அதன்படி, அதில் முத்துவேல் கல்லில் அடிபட்டு மயக்கம் அடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கதிர் உடனடியாக மருத்துவமனை ஆம்புலன்ஸ்க்கு கால் செய்கிறார். ஆனால் குமார் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்று முத்துவேலை கதிர் தாக்கியதாக பொய் கூறுகிறார்.
அதன் பின்பு முத்துவேலை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அதே நேரத்தில் குமாரின் அப்பா, கதிர்தான் இதற்கு காரணம் என போலீசில் புகார் கொடுத்து அவரை கைது செய்கின்றனர்.
இவ்வாறு மருத்துவமனையில் இருந்து கதிர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். எனவே முத்துவேல் கண் விழித்தால் தான் இது தொடர்பான உண்மை தெரியும். இல்லை இந்த உண்மையை மறைக்க குமார் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதையும் இனிவரும் எபிசோடுகளில் பார்ப்போம்.
Listen News!