• Dec 26 2024

ரம்பா புருஷன் ஏற்கனவே திருமணம் ஆனவரா? இத்தனை நாளா தெரியாம போச்சே..!!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் அந்த காலப்பகுதிகளில் புகழின் உச்சியில் கொடி கட்டிப் பறந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடம், ஹிந்தி மற்றும்  போஜ்புரி உள்ளிட்ட பலமொழிகளிலும் நடித்து பிரபலமானார்.

1993 ஆம் ஆண்டு தமிழில் வெளியான உழவன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் பாடல்கள் இன்று வரை பலரது பேவரிட் பாடலாக உள்ளன.

அதன் பின்பு சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார் ரம்பா. அதன் பின்பு இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

தொடை அழகி என அழைக்கப்பட்ட ரம்பா, குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், விஜய், அஜித், அர்ஜுன், பிரசாந்த், கார்த்திக் என முன்னணி நடிகர்களுடனும் நடித்திருந்தார். அவ்வளவு பிஸியான நடிகையாக மாறினார் ரம்பா.


ஒரு கட்டத்தில் 2010 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மொத்தமாக மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


இந்த நிலையில், நடிகை ரம்பாவுக்கு திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய கணவர் ஏற்கனவே திருமணம் முடித்தவர் என்ற ஒரு தகவல் தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே துஷ்யந்தி செல்வவிநாயகம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் அதைப்பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் ரம்பா கூறி இருந்தார்.

இதை தொடர்ந்து ரம்பா அவரை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் சிறிது காலம் பிரிந்தும் வாழ்ந்தார்கள். இது தொடர்பான வழக்கு சென்னையில் நடைபெற்றது. தனக்கு மாதம் 2.5 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் ரம்பா. ஆனால் அவரின் கணவர் ரம்பாவுடன் சேர்ந்து வாழவே விருப்பம் தெரிவிக்க அதன் பின்பு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது சினிமா துறையில் இருந்து விலகி தனது குடும்பத்தை மகிழ்ச்சியாக கொண்டு நடத்தி வருகின்றார் ரம்பா. அவ்வப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

Advertisement

Advertisement