• Dec 29 2024

சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து ஸ்ருதி விலகுகிறாரா? மீனா கொடுத்த பல்பு

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் நடிக்கும் பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இந்த சீரியலின் முக்கிய கேரக்டரில் நடிப்பவர்கள் தான் முத்து,மீனா.  இதைத்தொடர்ந்து ரோகிணி, மனோஜ் அடுத்ததாக ரவியும் ஸ்ருதியும் காணப்படுகின்றார்கள். இந்த சீரியலில் இளம் நடிகர்கள் நடித்து வருவதால் இதற்கான ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.

இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் ஸ்ருதி பிரபல youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.


குறித்த பேட்டியில் இருக்கும் போதே மீனாவுக்கு அழைப்பை ஏற்படுத்திய ஸ்ருதி, தனக்கு பட வாய்ப்பு கிடைத்ததாகவும் இதனால் சீரியலில் இருந்து விலகப் போவதாகவும் சொல்ல, உடனே மீனா எந்த சேனல்ல இருக்கீங்க என உஷாராக கேட்டு விடுகிறார்.

இதனால் ஸ்ருதிக்கு மட்டுமின்றி பேட்டி எடுத்தவருக்கும் ஷாக் ஆகிவிடுகிறது. இதனால் வேறு வழியின்றி தான் சேனல் ஒன்றில் இருப்பதாக உண்மையை சொல்லிவிடுகிறார் ஸ்ருதி.

Advertisement

Advertisement