• Dec 26 2024

அதிதி ராவுக்கும் சித்தார்த் இரண்டாவது திருமணமா? அவரின் முதல் கணவர் யாரு தெரியுமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'சிங்காரம்' என்ற படத்தின் வாயிலாக அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். இருப்பினும் இவர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து 'செக்க சிவந்த வானம், ஹேய் சினாமிகா' உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். 

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பாலிவுட்டில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார். 

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ்வும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், நேற்றைய தினம் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று தீயாய் பரவி வந்தது.


இந்த நிலையில், தற்போது அதிதி ராவின் முதல் கணவர் குறித்தும், சித்தார்த்தின் முதல் மனைவி குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


அதன்படி நடிகை அதிதி ராவ் தனது 21 வது வயதிலேயே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். முதல் கணவர் இவரை பிரிந்ததும் மசாபா குப்தா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவர் பாலிவுட் நடிகை குப்தாவில் ஒரே மகளும், பாலிவுட் திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராகவும் காணப்படுகிறார்.


அதேபோல நடிகர் சித்தாத்திற்கும் கடந்த 2003 ஆம் ஆண்டில் மேக்னா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவரும் மனைவியை பிரிந்ததை அடுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். 

இவ்வாறான நிலையில், அதிதி ராவை காதலித்து நேற்றைய தினம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த அதிகார பூர்வ  தகவலை விரைவில் அவர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement