• Dec 25 2024

கங்குவா படத்தில் இப்படியொரு சுவாரஸ்யம் இருக்கா? அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் அனிருத்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில்  கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் திஷா பதானி,  பாபி தியோல் உள்ளிட்டவர்கள் முக்கிய லீட் கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்திற்கான பட ப்ரோமோஷன் நடைபெற்று வருகின்றன.

வரலாற்று பின்னணியில் மிகப்பெரிய பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கங்குவா திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ளது கங்குவா படம். முன்னதாக இந்தப் படத்திற்கு கங்குவன் என்றுதான் பெயரிடப்பட்டிருந்ததாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் இந்தப் படத்தின் தலைப்பை கங்குவா என்று மாற்றியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில், கங்குவா திரைப்படத்தில் இசை அமைப்பாளர் அனிருத் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த தகவல் 100 சதவீதம் உண்மை எனவும் கூறப்படுகின்றது.

தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் பிரபல நட்சத்திரங்கள் கேமியோ ரோலில் நடிப்பது வாடிக்கையான ஒரு விஷயமாக பார்க்கப்படுகின்றது. அதுபோலவே கங்குவா  படத்திலும் அனிருத் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement