• Dec 26 2024

இது நல்ல கதையா இருக்கே.. ஈஸ்வரி கிச்சன் ஓப்பனிங்கில் நடந்த ட்விஸ்ட்!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம். 

அதில், ராமமூர்த்தி மாடியில் உடுப்புகளை காய வைத்ததற்காக ஈஸ்வரி அவரை திட்டிக் கொண்டிருக்க, அங்கு மையூவும் பாக்கியாவும் வருகிறார்கள்.

பாக்கியா மையூவுக்கு குடிப்பதற்கு அவளுக்கு பிடித்த ஜூஸ்  கொடுத்துவிட்டு படிப்பு சம்பந்தமாக கதைக்கிறார். அந்த நேரத்தில் ராதிகாவும் அங்கு வர, நடந்தவற்றை மையூ  சொல்லி பாக்கியா தான் கடைக்கு அழைத்துக் கொண்டு போய் ஸ்டேஷனரி சாமான்  வாங்கியதாக சொல்ல, ராதிகா அவருக்கு நன்றி சொல்கிறார்.

மறுபக்கம் கோபியின் கிளவுட் கிச்சனை ராமமூர்த்தியும்  ஈஸ்வரியும் திறந்து வைக்கிறார்கள். அதற்கான வேலைகளை விறுவிறுப்பாக ராதிகா செய்கிறார். கோபி கிச்சனில் செப்பாக வேலை செய்பவரை தனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி வைக்க, ஈஸ்வரி தனது மகனின் பெயரைக் காப்பாற்றுமாறு சொல்கிறார்.


இன்னொரு பக்கம் பாக்கியா ரெஸ்டாரண்டில் உணவுகளை பார்த்துவிட்டு மீதமுள்ள உணவுகளை வேலையாட்கள் சாப்பிட்டு முடித்தால் சரியாக இருக்கும் என்று பார்க்கிறார். அங்கு எழில் வருகிறார். அதற்கு செல்வி, நீங்க கோபி சார்ட ஹோட்டல் ஓப்பனிங்க்கு போகலையா எனக் கேட்கிறார். அதற்கு எழில், போகணும் என தோனல ஆனா,  இதை வைத்து பிறகு ஒரு பிரச்சனை வரும் என சொல்லி சிரிக்கிறார்.

அத்துடன் ஈஸ்வரி கிச்சன் என்று கோபி பேர் வைத்துள்ள நிலையில், இனியா அம்மாவும் ஈஸ்வரி பேர்ல எல்லாம் வச்சிருக்காங்க, அப்பாவும் ஈஸ்வரி பேர்ல கிச்சன் ஆரம்பிச்சிட்டாரு என சொல்ல ஈஸ்வரி வெட்கப்படுகிறார்.

ஆனால் செழியன் இதனால பிறகு பிரச்சினை வராதா என கேட்க, அப்படி பிரச்சனை வந்தால் பாக்கியா பெயரை மாத்தட்டும் என கோபி கோவமாக சொல்கிறார். 

அதன்பின், ராதிகா பணியாளர்களுக்கு ஆர்டர் கொடுத்து துறுதுறுவாக வேலை செய்வதை ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் பார்த்து நெகிழ்கிறார்கள். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement