• May 25 2026

விஜய்யின் வெற்றிக்கு இதுதான் காரணமா.? நடிகர் மோகன்லால் உடைத்த உண்மை.!

shali / 57 minutes ago

Advertisement

Listen News!

மோகன்லால் கூறியதாகக் கூறப்படும் ஒரு கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது. நடிகர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விட திரையில் ஏற்கும் கதாபாத்திரங்களின் மூலமாகவே மக்கள் மத்தியில் அடையாளம் பெறுகிறார்கள் என்ற அவரது கருத்து, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர், “நாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களால் தான் மக்களுக்கு எங்களை இந்த அளவிற்கு பிடிக்கிறது. எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, விருப்பு-வெறுப்புகள் குறித்து மக்களுக்கு அதிகம் தெரியாது. ஆனால், நாங்கள் திரையில் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்களின் மூலம் தான் மக்கள் மத்தியில் எங்களுக்கான செல்வாக்கு உருவாகிறது.” என தெரிவித்துள்ளார் என சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.


மேலும், நடிகர் விஜய் அவர்களின் வெற்றிக்குப் பின்னால் சினிமா துறையின் பங்கு மிக முக்கியமானது என்றும், ரசிகர்கள் மற்றும் திரைப்படத் துறை இணைந்து உருவாக்கும் தாக்கமே ஒரு நடிகரின் உயர்வுக்கு காரணம் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கருத்துகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. சிலர் இதை உண்மையான பாராட்டாகக் கருதுகின்றனர்.

Advertisement

Advertisement