• Aug 25 2025

ஜனநாயகன் இசை வெளியீடு..! முன்னணி நட்சத்திரங்கள் ஒரே மேடையில்..!

luxshi / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பன்முக நடிகராக வலம் வருபவர்தான் தளபதி விஜய்.


இவர் கடந்த 40 ஆண்டுகளாக ரசிகர்களின் இதயத்தில் வலுவான இடம் பிடித்து வந்தார். 

தற்போது, தனது நடிப்புப் பயணத்தை முடித்து, அரசியலில் முழுமையாக ஈடுபடவுள்ளார். 


இந்நிலையில் அவரது கடைசி படம் ‘ஜனநாயகன்’ குறித்து ரசிகர்கள் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.


அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.


இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவானது, வழமையாக இடம்பெறும் இசை வெளியீட்டு விழாவல்ல. அது ஒரு திரையுலக பிரியாவிடை விழா ஆக மாற உள்ளது என்பது முக்கிய செய்தி.

இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்களான  ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா ஒரே மேடையில் கூடி விஜய்க்கு மரியாதை செலுத்தவுள்ளதாக திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வழக்கமாக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்காத இவர்களது இந்த ஒன்றுகூடல், தமிழ் சினிமா வரலாற்றில்  ஒரு முக்கிய தருணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல தலைமுறைகளுக்கு “இளையதளபதி” என பெயர் பெற்ற விஜய், தனது ஆளுமையையும், ரசிகர்களிடையேயான உறவையும் நிரூபித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது அரசியலில் களமிறங்கும் நிலையில், அவரது சினிமா பயணத்தின் இறுதி விழாவாக மாறும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்களுக்கும் திரைத்துறைக்கும் உணர்ச்சி மிகுந்த தருணமாக அமையவிருக்கிறது.

Advertisement

Advertisement