தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, தற்போது நடித்து வெளிவந்துள்ள ‘கிங்டம்’ (Kingdom) திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம்.
இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸான சில வாரங்களுக்குப் பிறகு, தற்போது OTT தளத்தில் வரவுள்ளது என்பது ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தையும், ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.
‘கிங்டம்’ திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 27, 2025 அன்று உலகப்புகழ் பெற்ற Netflix ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்த அறிவிப்பு தற்பொழுது அதிகாரபூர்வமாக வெளியாகியதும், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா தற்போது தனது திரைப்பட தேர்வுகளில் மாற்றங்களை கொண்டுவந்து, வித்தியாசமான கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் தீவிரமாக செயல்படுகிறார். அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது தான் 'கிங்டம்' படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!