• Aug 25 2025

ஏங்கககக...... கூமாப்பட்டி தங்கப்பாண்டி பிரபல நடிகையுடன் நெருக்கமாக நடனம்..!

luxshi / 5 hours ago

Advertisement

Listen News!

கூமாப்பட்டி கிராமத்தை உலகளவில் பிரபலப்படுத்திய தங்கப்பாண்டி, தற்போது தொலைக்காட்சி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.


இன்ஸ்டாகிராமில் தனது ஊரைப் பற்றி வெளியிட்ட நகைச்சுவை வீடியோக்கள் மூலம் பிரபலமான தங்கப்பாண்டி, “ஏங்ககககக…” என்று தொடங்கும் தனித்துவமான பேச்சு முறையால் வைரலானார்.

தனது ஊரை ஸ்விட்சர்லாந்து என்றும், அங்குள்ள தண்ணீர் சர்பத் போல இனிக்கும் என்றும் கூறிய வீடியோக்கள் பலராலும் ரசிக்கப்பட்டன.

இந்த பிரபலத்துக்குப் பிறகு நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடை விளம்பரங்களிலும் நடித்த தங்கப்பாண்டி, தற்போது ஜீ தமிழின் “சிங்கிள் பசங்க” என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.


இந்த வாரம் நடைபெற்ற ரீகிரியேஷன் சுற்றில், நடிகை சாந்தினி பிரகாஷுடன் இணைந்து “சலக்கு சலக்கு சரிகை சேலை” பாடலுக்கு அவர் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இருவரும் நெருக்கமாக ஆடிய காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்கப்பாண்டியைப் பற்றி பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


சமூக வலைதளத்தை அசத்திய தங்கப்பாண்டி, தற்போது தொலைக்காட்சி மேடையையும் கைப்பற்றியுள்ளார்.

Advertisement

Advertisement