• Aug 25 2025

மறைந்தாலும் மறக்க முடியாத முகம்! விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய நடிகர் சங்கம்!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

இன்று (ஆகஸ்ட் 25, 2025) தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும், ஒரே நெகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைவுகூரப்படுகிறார் விஜயகாந்த். தமிழ் திரையுலகின் முன்னாள் முன்னணி ஹீரோவாகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், மேலும் அரசியல்வாதியாகவும் தனக்கென ஒரு சிறப்பை பெற்றவர் இவர்.


அவரது 73வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு, சங்க நிர்வாகிகள் மற்றும் சில முக்கிய நடிகர்கள் மலர் செலுத்தி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.


விஜயகாந்த் தனது திரைப்பட பயணத்தின் உச்சியில் இருந்த போதே, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சமூக நலனுக்காகவும், நடிகர்களுக்கான நலத்திட்டங்களுக்காகவும் பங்களித்தவர். அத்தகைய நடிகரின் பிறந்தநாளை இன்று திரையுலக பிரபலங்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். 

Advertisement

Advertisement