• Dec 26 2024

ஆர்த்தியுடன் மோதல் விவகாரம்.. வீட்டிற்கே வராத ஜெயம் ரவி.. எங்கு தங்குகிறார்?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் கருத்து வேறுபாடுடன் இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய போவதாகவும் வதந்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் இருவருக்கும் நெருக்கமான தரப்பிலிருந்து விசாரித்த போது கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் விவாகரத்து செய்யும் அளவுக்கு விபரீதமான முடிவை எடுக்க இருவருமே விரும்பவில்லை என்றும், இரு தரப்பு பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அவர்கள் இணைந்து வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி வீட்டுக்கே செல்லவில்லை என்றும் ஆர்த்தி முகத்தில் விழிக்க கூட அவர் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஜெயம் ரவி தற்போது தனது அலுவலகத்தை புதிய இடத்திற்கு மாற்றி உள்ளதாகவும் அங்கு தான் அவர் இப்போது தங்கியிருப்பதாகவும் அங்கிருந்துதான் அவர் படப்பிடிப்புக்கு செல்வது வருவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக வீட்டுக்கே செல்லாமல் ஜெயம் ரவி இருப்பதாக அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளதால் ஆர்த்தி மீது இன்னும் அவர் கோபமாக இருப்பதாகத்தான் தெரிகிறது என்று கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த விவகாரம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தாலும் ஜெயம் ரவியோ ஆர்த்தியோ இது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி வருவதாக பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ், ஜிவி பிரகாஷ் உட்பட பலர் அவர்களுடைய விவாகரத்து குறித்த செய்தி வந்த போது அவர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பிரிவதாக தெளிவுபடுத்திய நிலையில் ஜெயம் ரவி, ஆர்த்தியும் அதேபோல் பிரிகின்றார்களா அல்லது இந்த செய்திகள் அனைத்தும் வதந்தியா என்பதை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement