• Dec 25 2024

பூஜையுடன் ஆரம்பமான "காளிதாஸ் - 2", பூஜைக்கு வந்த அடுத்த பிரபலம் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

2019 ஆம் ஆண்டளவில் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத்தின் நடிப்பில் வெளியான காளிதாஸ் திரைப்படமானது பரத்தின் திரைவாழ்வில் குறிப்பிடத்தக்க ஓர் படமாக அமைந்தது.ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப் படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.

Image

பரத்தின் கேரியரில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான "காளிதாஸ்" படத்தின் தொடர்ச்சியாக  "காளிதாஸ் - 2" தொடங்கவிருப்பதாக சற்று நாட்களுக்கு முன் உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியிருந்தது.இந்நிலையில் "காளிதாஸ் -2" படத்தின் படிப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் ஆரம்பமாகியது.

Image

"காளிதாஸ் -2" திரைப்படத்தின் பூஜை நிகழ்வில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் கலந்து சிறப்பித்திருந்தார்.பூஜை நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement