• Dec 26 2024

2 வருடமாக படம் ரிலீஸ் இல்லை.. ஒரே ஆண்டில் 3 படங்கள் ரிலீஸ் செய்யும் உலகநாயகன்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஒரே ஆண்டில் மூன்று படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான திரைப்படம் ’விக்ரம்’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கமல் படம் வெளியான நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டு ஜூன் வர இருக்கும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கமல்ஹாசன் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.



இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் கமலஹாசன் நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக கமல்ஹாசன் வில்லனாக நடித்த ’கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து ஜூலை மாதம் 13ஆம் தேதி ‘இந்தியன் 2’ படம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’தக்லைஃப்’ வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த மூன்று திரைப்படங்கள் ஒரே ஆண்டில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 ஆம் ஆண்டு ’உத்தம வில்லன்’ ’பாபநாசம்’ மற்றும் ’தூங்காவனம்’ ஆகிய மூன்று படங்கள் வெளியான நிலையில் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement