இந்தியன் 2 படத்தினை தொடர்ந்து கமல்காசன் மணிரத்னம் இயக்கத்தில் "thug life " எனும் படத்தில் நடித்து வ்ருகின்றார். படத்திற்கான இசை வெளியீடு நேற்று முன் தினம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கமல் அடுத்து ராஜ் கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இப் படத்தினை இரட்டை ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்கவுள்ளதுடன் லைகா நிறுவனத்துடன் இணைந்து செய்வதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. படம் 250 கோடி பட்ஜெட்டில் எடுப்பதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது.
மேலும் படத்தின் ஒரு சில ஆரம்ப வேலைகளை கமல் அமெரிக்காவிற்கு படிப்புக்கு சென்ற போது அங்கு இயக்குநர்களை அழைத்து முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!