• Dec 26 2024

ராஜியை தள்ளிவிட்டு நகைகளுடன் எஸ்கேப்பான கண்ணன்! பாக்கியா எடுத்த அதிரடி முடிவு! உண்மைகளை உடைத்த கதிர்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், ரூம்க்கு வந்த கண்ணன், ராஜியை நெருங்க நினைக்க, ராஜி அவரை தடுத்து எப்போ கல்யாணம்? கோவில்ல விசாரிச்சியா? என கேட்க, அவர் பிடி கொடுக்காமல் பேச, கண்ணன் கத்துகிறார். ராஜி சத்தமா பேசாத என அழுகிறார்.

மறுபக்கம், கோமதியை பார்க்க பாக்கியா ரூம்க்கு செல்ல, அங்கு ராஜி ஓடிப்போன விஷயத்தை சொல்கிறார்.


இதை தொடர்ந்து, கண்ணன் தனது பையில் வைத்து இருந்த நகைகளை பார்த்து ராஜி அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் நான் உன் பணத்துக்காக தான் உன்ன லவ் பண்ணினான் என உண்மையை உடைக்க, ராஜி கதறி அழுகிறார். கண்ணன் நகைகளை ராஜியிடம் இருந்து பறித்துவிட்டு ஓட, ராஜியும் அவன் பின்னாலையே ஓடுகிறார். இதை பார்த்த பாக்கியாவும் எழிலும் அவரை பின் தொடர்ந்து ஓடுகிறார்.

எனினும், கண்ணன் அவர்களிடம் இருந்து தப்பித்து காரில் ஏறி தப்பிக்கிறார். ராஜி ரோட்டில் கிடந்து அழ, பாக்கியா வந்து ஆறுதல் கூறுகிறார். பின்பு ரூம்க்கு வந்து அவருக்கு ஆறுதல் கூற, நடந்த அனைத்தையும் சொல்லி அழுகிறார் ராஜி.. எனினும் உங்க வீட்டுல நான் பேசுறன் என சொல்ல, இல்ல வேண்டாம் என பயப்படுகிறார் ராஜி.

அத்துடன், கோமதிக்கு முத்து அண்ணன் எடுத்த விபரீத முடிவு தெரிய வருகிறது. மேலும், கதிரும் அவங்க லவ் பண்ணின விஷயத்தை சொல்லி, அவன் ஒரு பொறுக்கி, நான் பல தரம் கண்டிச்சு இருக்கன் என சொல்லுகிறார்.

ராஜி ரூமில் தனியாக இருக்க, அவருக்கு பாதுகாப்பாக இன்டைக்கு அவங்க கூட இருப்போம் என பாக்கியா, எழில், அமிர்தா, செல்வியிடம் சொல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement