• Dec 25 2024

நந்தினியை சரமாரியாக அடிக்கும் போலீஸார்... ரத்த காயங்களை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த கதிர்... இனி நிகழப் போவது என்ன?

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான டாப் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இதில் தற்போது தர்ஷினி காணாமல் போனதற்கு பின் நாம் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் நடந்துவிட்டது. கதிர் மற்றும் ஞானம் இருவரும் தனது அண்ணன் ஆதி குணசேகரன் நம்மை அடிமையாக வைத்திருந்தார் என்பதை உணர்ந்துவிட்டனர்.


காணாமல் போன தர்ஷினியை தேடாமல், அவளை தேடி சென்ற ஜனனி, நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் ஜீவானந்தம் ஐவர் மீதும் போலீசில் புகார் கொடுத்துவிட்டார் ஆதி குணசேகரன். தர்ஷினியை தேடி பல இடங்களில் அலைந்தனர்.

இறுதியில் தர்ஷினி கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றும், அவர்களுக்கு தர்ஷினி கிடைக்கவில்லை. அப்போது அங்கு வந்த போலீஸ் ஜீனந்தத்தை கைது செய்தது.

இதன்பின் ஜனனி, நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா நால்வரையும் கைது செய்தது. இவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்து சக்தி, ஞானம் மற்றும் கதிர் மூவரும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.


காவல் நிலையத்தில் இவர்கள் தற்போது இருக்கும் நிலையில், அங்கு வந்த போலீஸ் நந்தினி மற்றும் ரேணுகா இருவரையும் விசாரிக்க வேண்டும் என கூறி, அறைக்குள் கூட்டி செல்கிறார்.

பின், நந்தினி வெளியே வரும்போது முகம் முழுக்க ரத்த காயங்களுடன், நடக்க கூட முடியாமல் வருகிறார். இதை பார்த்து அதிர்ச்சியில் கதிர் அப்படியே நிட்கிறார். 

Advertisement

Advertisement