• Apr 27 2026

இந்த நாள உங்க டைரியில குறிச்சு வச்சுக்கோங்க.. ரஜினி பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த கவின்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கவின் நடித்த ’ஸ்டார்’ திரைப்படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்றுமுன் அவர் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் உருவாகிய ’ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’ஸ்டார்’ படத்தின் ரிலீஸ் தேதி மே 10 என சற்றுமுன் கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்து புதிய அட்டகாசமான போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் காலண்டர், டைரி, போன், இல்ல மனசுல, எதுல முடியுமோ அதுல குறிச்சு வச்சுக்கோங்க, மே 10 முதல் ’ஸ்டார்’ என்று கவின் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த போஸ்டருக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

கவின், அதிதி பொலங்கர், லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர்  இந்த படத்தில் நடித்துள்ளனர். கவின் நடித்த ‘டாடா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ’ஸ்டார்’ படமும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement