• Jan 06 2025

கோலிவுட் ஹீரோயினியாகும் ஜனனி! வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலம் ஆனவர் தான் ஜனனி. இந்நிலையில் இவரின் நடிப்பில் அடுத்த திரைப்படம் வெளியாக இருக்கிறது இது தொடர்பான போஸ்டர் வெளியாகியுள்ளது.


நடிகை ஜனனி பிக்பாஸில் கலந்து கொண்டதன் பின்னர் தளபதி விஜய் உடன் லியோ படத்திலும் நடித்து இருந்தார். சின்ன ரோல் தான் என்றாலும் அவருக்கு நல்ல பாராட்டுகளும் கிடைத்தது. இந்நிலையில் இவரின் நடிப்பில் அடுத்து ஒரு திரைப்படம் தொடர்பான போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.


நடிகர் டீஜே அருணாச்சலம் ஜோடியாக "உசுரே" என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் டீஜே அருணாச்சலமுதன் பக்கத்தில் பைக்கில் அமர்ந்து இருப்பது போல இருக்கிறார் ஜனனி. இந்நிலையில் இவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வைரலாகும் போஸ்டர்.


Advertisement

Advertisement