தமிழ் சினிமா கொண்டாடும் டாப் இசையமைப்பாளர்களுள் ஒருவராக திகழ்பவர் அனிருத். இவர் ஏ.ஆர் ரகுமான் பள்ளியில் பயின்று இன்று இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
அனிருத்தின் இசையில் யூட்யூப்பில் வெளியாகும் பாடல்கள் விரைவிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து விடுகின்றன. தனுஷ் நடித்த மூன்று படத்தில் இவரது பயணம் ஆரம்பமானது. முதலாவது படத்திலேயே ரசிகர்களை கவரும் வண்ணம் தனது பாடலை இசை அமைத்திருந்தார்.
தமிழில் இறுதியாக வெளியான கூலி, மதராஸி, போன்ற படங்களுக்கு மட்டும் இல்லாமல் ஜெயிலர் 2, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜனநாயகன் போன்ற படங்களுக்கும் தெலுங்கில் கிங்டம், மாஜிக், த பாரடைஸ், ஹிந்தியில் கிங் போன்ற படங்களும் இவருடைய இசையில் தயாராகியுள்ளன.
இவ்வாறு பத்து படங்களுக்கு மேல் தனது கைவசம் வைத்துள்ள அனிருத், தனது சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே ஒரு படத்திற்கு பத்து கோடி ரூபாய் அதிக சம்பளமாக வாங்கி வருகின்றார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் திரைப்படத்தின் ஒரு ஆல்பத்துக்கு மட்டுமே 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் இதனால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் உயர்த்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஏ.ஆர் ரகுமான் மற்றும் அரிஜித் சிங் போன்ற லெஜண்ட் இசையமைப்பாளர்களையும் முந்தியுள்ளார் என கூறப்படுகிறது.
Listen News!