நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது திரைப்படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது அவர் நடித்த 52-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் தான் இயக்கி, நாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘இட்லி கடை’ திரைப்படம், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே வெளியான படத்தின் முதல் சிங்கிள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தனுஷ் எழுதி பாடிய ‘எஞ்சாமி தந்தானே’ பாடலின் லிரிக் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், படக்குழுவினர் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, ‘இட்லி கடை’ படத்தில் அருண் விஜய், அஷ்வின் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் ரசிகர்களிடையே ஆர்வத்தை உருவாக்கியுள்ள நிலையில், ‘இட்லி கடை’ திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!