பிரபல சமையல் கலைஞரும், அரசியல் மற்றும் சினிமா உலகில் வலுவான தொடர்புகள் கொண்டவருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஒரு பெண் ஜாய் கிரிசில்டா தீவிரமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தானும் அவரது இரண்டாவது மனைவியாக இருப்பதாகவும், தற்போது ஏழாம் மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறும் ஜாய், தன்னுடைய முழுக்கவீட்டுப் புகைப்படங்கள், தாலி, குங்குமம் போன்றவற்றை ஆவணங்களாக காட்டி, தனது குழந்தைக்கு உரிய அடையாளம் மற்றும் பதில் வேண்டுமென வலியுறுத்துகிறார்.
"அவரே என் கழுத்தில் தாலி கட்டினார், என் நெற்றியில் குங்குமம் வைத்தார். ரொம்ப சாதாரணமாக இல்ல, தினமும் அவர் வீட்டிலிருந்து கிளம்புறதுக்கு முன்னாடி பூஜை அறையிலிருந்து குங்குமம் எடுத்து என் நெற்றியில வச்சுட்டுத்தான் கிளம்புவார்," என உணர்ச்சி மிகுந்த குரலில் ஜாய் கூறினார்.
ஜாய் சொல்படி, இவர்களது திருமணம் 2023 டிசம்பரில் சென்னையில் உள்ள திருவேதி அம்மன் கோவிலில் நடைபெற்றதாம். அந்த நிகழ்வுக்கு ரங்கராஜின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தெரியாமலோ, எதிர்ப்போ இல்லாமல் ஒப்புக்கொண்டதாகவும், அவர்களும் ஜாயை ஏற்றுக்கொண்டதாகவும் கூறுகிறார்.
ஆனால், ஒரு முக்கியமான சட்ட சிக்கல் இங்கு தோன்றுகிறது – ரங்கராஜ், சட்டபூர்வமாக இன்னும் தனது முதல் மனைவி ஸ்ருதி பிரியாவிடமிருந்து விவாகரத்து பெறவில்லை என்பதே முக்கியமான பிரச்சனை. ஜாய் இதுகுறித்து கூறும் போது, "நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கப்புறம் அவரை நானே கேட்டேன் – 'ஸ்ருதிக்கு சொல்லி விடுங்க'ன்னு. ஏன்னா இன்னொரு பெண்ணுக்கு காயம் செய்யக்கூடாது. அவரு சொல்லிட்டேன், சொல்லிட்டேன்னு தான் சொன்னாரு. ஆனா நான் ஸ்ருதிக்கு அழைச்சி பேச முயற்சிக்கும்போது, அவர் எந்தத் தருணத்திலும் என் போன்கால் எடுத்தது கிடையாது."
ஜாய் மேலும் தெரிவிப்பதாவது, சமீபத்தில் அவரால் வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பயங்கரவாதம் அல்லது பழிவாங்கல் நோக்கத்துடன் அல்ல, அதன் பின்னணியில் உள்ள உண்மை மற்றும் எதிர்பார்ப்பு என்னவெனில், "எனக்கு பதில் வேணும். என் குழந்தைக்கு உரியதான அடையாளம் வேணும். இது பழிக்கு பழி கிடையாது, இது நீதிக்கான போராட்டம்."
அவர் மேலும் கூறுகிறார்: "மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு பெரிய ஆள் தான்னு எனக்கு தெரியும். அவருக்கு சி.எம், பி.எம் எல்லாருமே தெரியும். ஆனா, அதனால் ஒரு பெண்ணை, ஒரு குழந்தையை விட்டுவைக்கலாமா? எதற்காக இந்த குழந்தை மரியாதையில்லாமல் இருக்கணும்?"என்று பல கேள்விகள் எழுப்பி உள்ளார். மேலும் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
Listen News!