• Dec 26 2024

பாக்கியாவை மிரட்டிய மாலினி.. பேங்க் காரர்கள் முன்பு கோபியை போட்டுக்கொடுத்த ஈஸ்வரி! அதிர்ச்சியில் ராதிகா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய நாள் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான எபிசோட் வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதன்படி, வீட்டுக்கு வந்த ஜெனியின் அப்பா, செழியன் உனக்கு வேணாம்மா, இந்த குடும்பத்துக்கு அவன் வேண்டாம். நான் சொல்லுறத கேளுங்க.. இனி ஜெனி வாழ்க்கைல அவன் வேண்டாம் என ஆவேசமாக கத்துகிறார். ஜெனி அழுது கொண்டு இருக்கார்.


மறுபக்கம் மாலினியை வரவழைத்து பேசுகிறார் பாக்கியா. அங்கு வந்த மாலியினிடம், நான் இதுவரைக்கும் பேசாம இருந்ததுக்கு காரணம் செழியனும் தப்பு பண்ணி இருக்கான் என்று தான், ஆனா நீ ரொம்ப ஓவரா தான் போற..அவங்க சேரனும் என்று நினைக்கும் போது ஏன் நீ இடையில் குழப்புற என கேக்க, ஆமா நான் செழியனை நம்பி தானே இருக்கன். அவன் என்ன விட்டுட்டு போன நான் என்ன பண்ணுற. இப்படி தான்  பண்ணுவன் என சொல்ல, உனக்கு இப்ப என்ன தான் செய்யணும் என்று பாக்கியா கேக்க, செழியனை கல்யாணம் செய்து வைக்குமாறு மாலினி சொல்லுகிறார். 


அப்போ ஜெனி, குழந்தை என்று சொல்ல, அத பத்தி எனக்கு என்ன கவலை என்று மாலினி சொல்லுகிறார். இதற்கு பாக்கியா, நீ நினைக்கிறது நடக்காது. செழியன் என் பிள்ளை.. என்று மாலினியை மிரட்டி செல்லுகிறார்.

இதை தொடர்ந்து ஜெனி வீட்டுக்கு பாக்கியா செல்ல, ஜெனியின் அப்பா என்ன இங்க என்று கேக்க, ஜெனியை பார்க்க வந்தன் என்று பாக்கியா சொல்லுகிறார். எனினும் அவரது அப்பா கோவமாக ஜெனியை பார்க்க விடாமல் தடுக்க, பாக்கியா நான் என் மருமகள் கூட கதைப்பன் என அவரது கையை பிடித்துக் கொண்டு ரூம் கு செல்லுகிறார். அங்கு நடந்தவற்றை எல்லாம் சொல்லுகிறார். மாலியின் நாடகம் பற்றியும், அவரது நோக்கம் பற்றியும் சொல்லி, நிதானமா முடிவு எடும்மா.. நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் உன் பக்கம் தான் இருப்பன் என சொல்லி கிளம்புகிறார்.


இன்னொரு பக்கம், கோபி வீட்டிற்கு வந்த பேங்க் காரர்கள் கோபியின் அம்மாவிடம் அவர் எங்கே என விசாரிக்க, அவன் இப்போ இல்லை என ஈஸ்வரி சமாளித்துக் கொண்டு இருக்க, அங்கு ராதிகாவும் வருகிறார். அவர் வந்து என்ன விஷயம் என கேக்க, நான் தானே பேசுறன் நீ உள்ள போ..போ.. என விரட்டுகிறார். எனினும் இறுதியில் ராதிகாவுக்கு கோபி கடன் வாங்கிய விஷயம் தெரிய வருகிறது. இது தான் இன்றைய எபிசோட்.


 

Advertisement

Advertisement