• Jul 23 2025

விஜயாவை போட்டுத் தாக்கிய மனோஜ்.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனா கேட்ட கேள்வி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜை இழுத்துக் கொண்டு ரோகிணி ரூமுக்கு செல்ல, அவர்களை தடுத்த முத்து மனோஜிடம் துருவித் துருவி நகையை பற்றி விசாரிக்கின்றார். இறுதியில் அண்ணாமலை கூப்பிட்டு விசாரிக்க ஒரு கட்டத்தில் மனோஜ் உண்மையை உலறிவிடுகின்றார். மேலும் அம்மா தான் மீனாவின் நகைகளை கொடுத்ததாக போட்டுக் கொடுக்கிறார்.

இதனால் கோபப்பட்ட அண்ணாமலை மனோஜை தாறுமாறாக அடிக்கின்றார். விஜயாவுக்கும் பொய் சொன்னதற்காக அவரை அடிக்க கையொங்க, முத்து அதை தடுக்கின்றார். அதன்பின்பு முத்து மனோஜை அடிக்க ரோகிணி வந்து என்ன ஆளாளுக்கு அடிக்கிறீங்க என தடுக்கின்றார்.

அதன்பின்பு விஜயா மீது கோபப்பட்ட அண்ணாமலை, நீ செய்த தப்பெல்லாம் செய்து போட்டு இப்படி நாடகமாடி இருக்கியே, உன்கூட இருக்கவே பயமா இருக்குது. உன் பிள்ளைக்கான என்ன கொண்டாலும் கொள்ளுவா, என்  கூட இனி கதைக்காத என்று சொல்லுகிறார். மீனாவும் நீங்க செய்ற எல்லாம் செய்துட்டு எங்க அம்மா, பட்டி மேல திருட்டு பலி போடுறீங்க. இது எந்த விதத்துல நியாயம் என கேட்கிறார்.


இதனால் வேறு வழி இன்றி விஜயா ரூமுக்கு சென்று கதவை பூட்டிக் கொள்கிறார். இதனால் மனோஜூம் ரோகிணியும் பயப்பட்டு கதவை தட்ட விஜயா கதவை திறக்கவில்லை. ரவியும் அண்ணாமலையிடம் வந்து அம்மாவை கூப்பிடுமாறு சொல்ல, அவர் கூப்பிடவில்லை.

இதை அடுத்து முத்துவும் மீனாவும் அண்ணாமலையை  சமாதானப்படுத்தி விஜயாவை கூப்பிடுமாறு சொல்ல, அவர் இனி விஜயா கூட கதைக்க மாட்டேன் என பிடிவாதமாக இருக்கின்றார். இதனால் முத்து அவர் செய்த தப்பு எல்லாரும் முன்னாடியும் தெரிஞ்சுடுச்சு அதனால அப்படியே விட்டா அவங்க தூங்கி எழுந்து வருவாங்க என சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement