இயக்குநர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. சமூக அக்கறை கொண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், குறிப்பாக பெண்களின் வாழ்க்கைச் சவால்களை உணர்வுபூர்வமாக எடுத்துரைப்பதாக பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், படத்தை பார்த்த பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கண்ணீர் மல்க பேசிய ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநர், “உண்மையிலேயே பல விதவைப் பெண்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை வேதனையை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட ஒரு படத்தை கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி.” என்று தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் 1500க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் இருக்கிறோம். படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை அனைவரிடமும் கொண்டு செல்வோம். குறிப்பாக விதவைப் பெண்களுக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இந்த படத்தை கண்டிப்பாக காட்டுவோம்.” என்றும் அவர் உருக்கமாக கூறினார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படத்தின் சமூகச் செய்தி மக்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!