தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்ட படைப்புகளுக்காக பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்களை உருவாக்கி அதற்கேற்ற வசூல் சாதனையையும் பதிவு செய்தவர் எனப் புகழப்படும் ஷங்கர், சமீப காலமாக சில சறுக்கல்களை சந்தித்துள்ளார். கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்த சூழலில், ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் ஹீரோவாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றது. அதன்படி, அட்லீயின் உதவி இயக்குநரான அசோக் இயக்கும் புதிய படத்தின் மூலம் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு ‘லவ்வர் பாய்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பூஜை விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் அரசியல், சினிமா துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, தமிழக முதலமைச்சர் சஞ்சய் தனது நண்பரின் புதிய திரைப்பட பூஜையில் நேரில் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தது நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பாக அமைந்தது.
மேலும், இந்த விழாவில் இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், எச். வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், பிக் பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
‘லவ்வர் பாய்’ திரைப்படம் விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Listen News!