சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், மீனாவும் முத்துவும் ஆங்கில வகுப்பில் இருக்கின்றனர். இதன்போது ஸ்வேதா கேள்வி கேட்க, அவருடைய நண்பர் ஸ்வேதாவின் அழகில் மெய்மறந்து தடுமாறுகிறார். இதனால் முத்துவுக்கு சந்தேகம் வருகிறது.
மேலும், அவர் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணுவதற்கு என்ன ப்ரொசீஜர் என்று விலாவாரியாக விசாரிக்கிறார். இதனை முத்து மீனாவிடம் கூறுகிறார்.
இன்னொரு பக்கம், மருத்துவமனையில் இருந்து ரேகா காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர். இதன்போது அங்கு எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை சிந்தாமணியிடம் காட்டுகின்றனர்.
அப்போது சிந்தாமணி, அவர்கள் இருவரையும் கைது செய்யுமாறு கூறுகிறார். அந்த நேரத்தில் ரேகா அனுப்பிய வீடியோ ஒன்று வருகிறது. அதில், “நான் சத்யாவை காதலிக்கிறேன். நீங்கள் ஹவுஸ் அரெஸ்ட் செய்ததால்தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். யார் மீதும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தால், நான் நேரடியாகவே ஆஜராகுவேன்” என்று அதிரடியாக கூறுகிறார்.

மேலும், “நான் கூடிய விரைவில் சத்யாவை திருமணம் செய்ய உள்ளேன். திருமணம் செய்துவிட்டு உங்களை சந்திக்கிறேன்” என்றும் கூறுகிறார். இதனை போலீசாரும் பார்த்துவிடுகின்றனர். இதனால் இந்த கேஸ் இத்துடன் நிற்காது என கூறுகின்றனர்.
இதனால், தனது ஸ்டைலில் முத்து, மீனாவுக்கு பதிலடி கொடுக்க களமிறங்குகிறார் சிந்தாமணி.
மறுபக்கம், வக்கீலை சந்தித்த மனோஜ், விஜயாவும் ரோகிணியும் விவாகரத்து கொடுக்க ஒத்துக்கொண்டதாக கூறுகின்றனர். இதனை அவர் நம்ப மறுக்கிறார். இதனால் அவர் ரோகிணிக்கு கால் பண்ணி நடந்தவற்றைக் கேட்க, அவரும் விவாகரத்து கொடுக்க ஒத்துக்கொள்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!