• May 24 2026

“கருப்பு” வெற்றிக்கு பின்னால் இப்படியொரு பின்னணி இருக்கா? பலருக்கும் தெரியாமல் போச்சே...

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் தான் “கருப்பு”. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான இந்தப் படம், வெளியானதிலிருந்து பாக்ஸ் ஆபீஸில் அதிரடி வசூலை குவித்து வருகிறது. 

சூர்யா மற்றும் த்ரிஷா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், கதையின் வலிமை, உணர்ச்சி நிறைந்த திரைக்கதை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.


“கருப்பு” திரைப்படம் தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி, பல திரையரங்குகளில் நீண்ட நாட்கள் ஓடும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து, படக்குழுவினர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பக்தி உணர்வுடன் ஒரு முக்கிய நிகழ்வை மேற்கொண்டுள்ளார்.

மதுரை அழகர்கோயில் பகுதியில் உள்ள கருப்பணசாமி கோவிலுக்கு, படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் விதமாக, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி 18 அடி உயரமான அரிவாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். இது பக்தர்களிடையேவும், ரசிகர்களிடையேவும் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

திரைப்பட வெற்றி மட்டுமின்றி, பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் நடந்த இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்வை “வித்தியாசமான நன்றி செலுத்தும் முறை” எனப் பாராட்டி வருகின்றனர். இதன் மூலம் “கருப்பு” திரைப்படத்தின் வெற்றியும், அதன் பின்னணியில் உள்ள உணர்வும் மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement