• Dec 26 2024

ரோகிணியை புதிய சிக்கலில் இழுத்துவிட்ட மீனா.. அதிர்ச்சியில் விஜயா

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணி தனக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப் போவதனால் அதனை செக் அப் பண்ணுவதற்காக வித்யாவை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் ஒன்றுக்கு வருகின்றார். 

அதே ஹாஸ்பிடலுக்கு மீனா சீதாவுக்கு இன்டர்வியூ என்பதால் அழைத்து வருகின்றார். அங்கு ரோகினியை செக்கப் பண்ணிய வைத்தியர் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை செகண்ட் பிரக்னன்சி என்பதால் கொஞ்சம் தள்ளிப் போய் இருக்கு ஆனால் குழந்தை கட்டாயம் கிடைக்கும் என்று சொல்லி சில மாத்திரைகளை எழுதிக் கொடுக்கின்றார்.

மறுபக்கம் சீதா இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி விட்டு மீனாவிடம் வந்து தனக்கு வேலை நிச்சயம் கிடைத்துவிடும் ஆனால் கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லி இருக்காங்க என்று சொல்கின்றார். அந்த நேரத்தில் மீனா தனக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்திருப்பதாக சொல்ல சீதா அவரை போயிட்டு வருமாறு அனுப்பி வைக்கின்றார்.

அதன் பின்பு சீதா அங்கு வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும்போது ரோகிணி ஹாஸ்பிடல் பில் கட்டுவதை பார்த்து விடுகின்றார். பிறகு மீனாவுக்கு போன் பண்ணி தனக்கு வேலை கிடைத்து விட்டதாக சொல்கின்றார். அத்துடன் ரோகிணியை ஹாஸ்பிடலில் பார்த்ததாகவும் சொல்லுகின்றார்.


இதனால் சந்தோஷத்தில் மீனா அப்படி என்றால் ரோகிணி கர்ப்பமாக இருக்கின்றார் என நினைத்து கொள்கின்றார். இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த மீனா கேசரி செய்து எல்லாருக்கும் கொடுக்கின்றார்.

இதன் போது விஜயா உங்க தங்கச்சி பாஸ் பண்ணினதுக்கு எங்க வீட்டு சக்கரையை தான் தீர்ப்பியா என பேச இது தங்கச்சிக்காக மட்டும் இல்லை ரோகிணிக்காகவும் தான் என்று மீனா சொல்லுகின்றார். இதனால் எல்லாரும் அதிர்ச்சியாக நிற்கின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement