• Apr 24 2026

ஏ.ஆர். ரஹ்மானின் 59ஆவது பிறந்தநாள்.. மகன் வெளியிட்ட மனதை தொடும் வாழ்த்து வைரல்!

shali / 3 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் இசையின் சிகரங்களைத் தொட்ட இசைப்புயல், “மியூசிக் ஜீனியஸ்” ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கோலிவுட், பாலிவுட் என பல மொழிகளில் கலக்கி வருபவர், ரசிகர்களின் மனதில் இன்று வரை மாறாத இடத்தைப் பிடித்துள்ளார். 

ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். பிறந்தநாளுக்காக அவர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் அனுப்பி வருகின்றனர். ‘#HappyBirthdayARRahman’ போன்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி, ரசிகர்கள் அவரது இசையை ரசித்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் அவருடைய மகன் அமீன், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவரது மகனாக இருக்கிறதை பெருமையாக உணர்கிறார் என்று தெரிவித்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள வார்த்தைகள் இதோ...

"நீங்கள் எனக்கு அப்பா மட்டுமல்ல, என் ஹீரோ. உங்களை நான் எப்போதும் முன்மாதிரியாக கருதுகிறேன். உங்கள் மகனாக இருப்பதில் எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அப்பா. உங்களை மிக அதிகமாக நேசிக்கிறேன்." என்று கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் விரைவில் வைரலாகி, ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement