• Jul 28 2025

செய்த பாவத்திற்காக மண் சோறு சாப்பிடும் விஜயா.! பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்த முத்து.!

subiththira / 8 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜ் ரோகிணியை பார்த்து கை, கால் எல்லாம் ரொம்ப வலிக்குது என்ன நிமிர்த்தி விடு என்கிறார். அதுக்கு ரோகிணி இந்த கட்ட அவுக்கிறது கஷ்டம் நான் வேணும் என்றால் மசாச் பண்ணிவிடுறேன் என்று சொல்லுறார். பின் முத்துவும் மீனாவும் ரதிய லவ் பண்ணின பையனை கூட்டிக்கொண்டு ரதி வீட்ட போய் நிற்கிறார்கள். அங்க ரதி வீட்டு ஆட்கள் முத்துவையும் மீனாவையும் அடிக்கிறார்கள்.


அந்த சத்தத்தை கேட்ட ரோகிணி மனோஜை பார்த்து முத்துவும் மீனாவும் வந்திருக்கிறார்கள் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மனோஜ் அவன் முன்னாடி இப்புடி இருந்தால் என்ர மானமே போயிடும் என்கிறார். அதனை அடுத்து, முத்து ரதி வீட்டு ஆட்களுக்கு தப்பு ரெண்டு பேர் பக்கமும் தான் இருக்கு என்று சொல்லுறார். பின் மீனாவும் இவங்க பண்ண தப்ப மாத்த முடியாது இனி செய்யணும் என்று தான் ஜோசிக்கணும் என்கிறார். 

அதனை அடுத்து அந்த பையனும் நான் கண்டிப்பாக ரதிய கல்யாணம் பண்ணுவேன் என்கிறார். பின் ரதியோட வீட்டு ஆட்களும் அந்த பையனோட வீட்டு ஆட்களும் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து விஜயாவும்  பார்வதியும் எல்லா பிரச்சனையும் தீரோணும் என்று கோயிலில மண் சோறு சாப்பிடுறார்கள். அதைப் பார்த்த மீனாவோட அம்மா விஜயா கிட்ட வந்து வீட்டில யாருக்கும் உடம்பு சரியில்லையா என்று கேட்கிறார். 


பின் விஜயா தேவையில்லாத விஷயத்தில தலையிடாதீங்க என்று மீனாவோட அம்மாவைப் பார்த்துச் சொல்லுறார். இதனைத் தொடர்ந்து ரதியோட கல்யாணத்திற்கு அவங்க வீட்டில இருக்கிற ஆட்கள் சம்மதிக்கிறார்கள். அதைக் கேட்ட ரோகிணி மனோஜை பார்த்து நாம தான் தோத்திட்டோம் என்கிறார். பின் மனோஜை பார்த்த முத்து ஏன் இப்புடி எல்லாம் கட்டிவச்சிருக்கீங்க என்று கேட்கிறார். இதனைத் தொடர்ந்து முத்து மனோஜை அங்கிருந்து கூட்டிக் கொண்டு போறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement