• Dec 27 2024

கர்ப்பிணியை காப்பாற்ற நடுரோட்டுல ஓடினான் என் நண்பன்! நடிகர் தியாகு கதறி அழுதபடி பேட்டி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகாந்த் இன்றைய தினம் உடல் நல குறைவால் உயிரிழந்தார். தற்போது அவருடைய உடலுக்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அதன்படி, தற்போது அவருடைய நண்பர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல்வேறு நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதில் விஜயகாந்தின் நண்பரான தியாகு என்பவர் கேப்டன் தொடர்பில்பல ரகசியங்களை உடைத்து இருக்கிறார்.

அதில், தனது நண்பர் விஜயகாந்த் ஒருநாள், கர்ப்பிணி பெண் ஒருவரின் தாலியை காப்பாற்றிக் கொடுத்ததாக கூறியுள்ளார். அதன்படி அவர் மேலும் கூறுகையில், 


ஒரு முறை நானும் விஜயகாந்த்தும் மனோரமா வீட்டுக்கு அவசர அவசரமாக காரில் போயிட்டு இருந்தோம். அப்போ திடீர்னு ரோட்டுல காரை நிறுத்தி இறங்கி ஓடுனார். நான் என்னன்னு பார்க்கும்போது அங்கு ஒரு கர்ப்பிணி பெண்ணின் தாலியை திருடன் ஒருவர் கொண்டு ஓட, அவரும் தான் நடிகன் என்பதை மறந்து அந்த திருடனை துரத்திப் பிடித்து, பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்தார்.


இதை தொடர்ந்து, அந்த திருடன் கையில் இருந்த தாலியை பிடுங்கி குறித்த  பெண்ணிடம் கொடுத்தார். அந்த பொண்ணு நடு ரோட்டிலே விஜயகாந்த் காலில் விழுந்து, அண்ணே.. என் தாலியை காப்பாற்றி தந்துட்டீங்க என்று அழுத்துச்சு..

அதற்கு பிறகு அந்த பொண்ணை சமாதானம் செஞ்சிட்டு அந்த திருடனை ரெண்டு மூணு அடி போட்டான். அப்போ நான் அதை தடுத்து நிறுத்துனேன் ஆனால் அவனை கடுமையாக விரட்டி விட்டான். 

அந்த நேரத்தில் நமக்கு ஏதும் நடந்திடும்னு கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல. நான் அதைப் பார்த்து வியந்து போனன் என்று கண்கலங்கி கதறி அழுதபடி கூறியுள்ளார் நடிகர் தியாகு.

Advertisement

Advertisement