• Apr 19 2026

சூரியின் அடுத்த திரைப்படத்திற்கான புது அப்டேட்....! வைரலாகும் எக்ஸ் தள பதிவு...!

Roshika / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இவர் தற்போது ஹீரோவாக வளர்ந்து வருகின்றார். இவரது நடிப்பில் வெளியான "மாமன்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில்  சூரியின் அடுத்த அப்டேட்  ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  


 மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'மண்டாடி' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் இந்த திரைப்படத்தில் மகிமா நம்பியார் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் சுஹால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன . 


இந்த நிலையில், நடிகர் சூரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அடுத்த திரைப்படமான "மண்டாடி" கவனம் செலுத்த உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். அப்பதிவு சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement