தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள சூர்யா, ரசிகர்கள் மனங்களில் தனக்கென ஓர் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ளார். இவருடைய சமீபத்திய படமான "ரெட்ரோ" இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து உருவாகி தியட்டர்களில் வெளியாகி இருந்தது.
ஆனால் தற்போது சூர்யா எடுத்து கொண்டுள்ள ஒரு தனிப்பட்ட முடிவு தான் இன்று இணையத்தை கலக்கியுள்ளது. அவரது அண்மைய கருத்துக்கள் மூலம், மீடியாவிடம் இருந்து தன்னைத் தள்ளி வைப்பது குறித்த அவரது மனநிலை தெளிவாக தெரியவந்துள்ளது.
ஒரு பிரபல இணைய ஊடக நிருபர், சூர்யாவிடம் ஒரு நேர்காணலில் கலந்து கொள்ள கேட்டபோது, சூர்யா அதற்கு கோபமாகப் பதிலளித்திருந்தார். அவர் கூறியதாவது, "நீங்க அஜித், விஜயிடம் போய் இப்படி பேட்டி கேட்பீங்களா? அவங்க தரமாட்டாங்கன்னு தெரியும். அவங்களப் போல தான் நானும்." என்று கூறியிருந்தார்.
இந்த வாக்கியம் மிக விரைவாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதில், அஜித் மற்றும் விஜய் போன்று தானும் மீடியாவை நெருங்க முடியாத சூழ்நிலைக்கு தன்னை கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று பலரும் கருதத் தொடங்கியுள்ளனர்.
அஜித், விஜய் இருவரும் மீடியாவிடம் அதிகம் பயணிக்காதவர்கள். குறிப்பாக அஜித், எந்த விதமான பத்திரிகை சந்திப்பு, நிகழ்ச்சி என எதற்கும் வராமல் தனக்கென ஒரு தனி முத்திரையை வைத்திருக்கின்றார். விஜயும் கடந்த சில ஆண்டுகளாக அதே பாணியில் செயல்பட்டு வருகின்றார். இவர்களைப் போலவே சூர்யாவும் தற்போது அந்த வழியையே பின்பற்ற முயற்சிக்கிறார் என தெரியவந்துள்ளது.
Listen News!