சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி தன்னை பணம் தரச்சொல்லி மிரட்டினவருக்கு போன் எடுத்து தன்ர விஷயம் ஒன்டையும் முத்துவிற்கு சொல்லிடாத என்கிறார். அதுக்கு அவர் நீ பணம் கொடுத்தால் நான் ஏன் சொல்லப்போறேன் என்கிறார். அதுக்கு ரோகிணி நிஜமாவே என்கிட்ட பணம் இல்ல என்று சொல்லுறார். இதனை அடுத்து ரோகிணி நீ கேட்ட பணம் வாரதுக்கு நான் ஒரு ஐடியா சொல்லுறேன் என்கிறார்.
மேலும், எங்க வீட்டில ஒரு கல்யாணம் நடக்கபோகுது அதுக்காக நகை வாங்க போறாங்க அது எங்கட வீட்டில தான் இருக்கும் அந்த நகையை எடுத்திட்டு போ என்கிறார். இதனை தொடர்ந்து சிற்றி நகையை எடுத்தால் மீனா வீட்டு கல்யாணம் நிற்கும் என்கிறார். பின் விஜயா பார்வதி வீட்ட பசங்களுக்கு டான்ஸ் பழக்கிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து முத்து அங்க வந்து பார்வதியை பார்த்து சீதாவுக்கு கல்யாணம் கண்டிப்பாக நீங்க வரணும் என்கிறார்.
இதனைத் தொடர்ந்து பார்வதி நீ செய்யுறதைப் பார்க்க ரொம்பவே சந்தோசமாக இருக்கு என்று சொல்லிட்டு கொஞ்ச பணத்தைக் கொடுக்கிறார். அதைப் பார்த்த விஜயா என்ன பார்வதி பணம் அதிகமாக இருக்கும் போலயே நீ பாட்டுக்கு வீசுற என்கிறார். பின் முத்து பணம் தந்ததுக்கு நன்றி என்று சொல்லுறார். இதனை அடுத்து விஜயா கிட்ட டான்ஸ் பழகவந்த பசங்க ரெண்டு பேர் லவ் பண்ணுறதை பாத்துட்டு ஷாக் ஆகுறார் முத்து.
பின் ஸ்ருதி மீனா கூட கடைக்குப் போய் நகை வாங்கிட்டு வந்து நிற்கிறார். அதைப் பார்த்த ரோகிணி நகை வீட்ட தான் இருக்கு போய் எடுத்துக்கோ என்று தன்னை மிரட்டினவருக்குச் சொல்லுறார். அந்த நேரம் பார்த்து மனோஜ் அங்க வந்து நிற்கிறார். அப்ப நகை எடுக்கிறதை பார்த்து திருடன் வந்து நிக்கிறான் என்று சொல்லிட்டு அடிக்கிறார் மனோஜ். பின் ஸ்ருதியும் மீனாவும் வந்து அவங்களும் அந்த திருடனை போட்டு அடிக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!