• Apr 04 2025

நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்த நாடோடிகள் அபிநயா..! விரைவில் திருமணம்..!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து ஈசன் ,குற்றம் 63 ,மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை அபிநயா தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக தனது சின்ன வயது நண்பனுடன் தான் உறவில் இருப்பதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது புகைப்படத்தை பகிர்ந்து தனது நிச்சயதார்த்தத்தினை உறுதி செய்துள்ளார்.


இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இவர் தனது சமூக ஊடகங்களில் தனது மற்றும் தனது துணையின் கைகள் கோவில் மணியை அடிப்பது போன்ற ஒரு அடையாளப் படத்தைப் பகிர்ந்துள்ளார்.மேலும் இப் புகைப்படத்தில் இருவரது விரல்களிலும் மோதிரம் அணிந்துள்ளனர்.


மற்றும் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் இவருக்கும் விஷாலுக்கு திருமணம் நடைபெற போகின்றது. எனும் கேள்விக்கு நேர்காணல் ஒன்றில் தெளிவாக பதிலளித்திருந்தாலும் தற்போது இந்த புகைப்படத்தினை பகிர்ந்து அவர் குறித்து வெளியாகிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

Advertisement

Advertisement