• Dec 26 2024

ஒரு கலைமாமணி விருது கூட குடுக்கல..! தலைவாசல் விஜயின் வில்லங்க பேச்சு

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல துணை நடிகர்கள் வலம் வந்தாலும், 90ஸ் களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர்களில் தலைவாசல் விஜயும் ஒருவர் என்றே கூறலாம். அவர் அந்தளவிற்கு தத்துரூபமான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர்.

1992 இல் செல்வா இயக்கத்தில் ஜீவா மற்றும் சுந்தர்.சி நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படம் தான் தலைவாசல். இந்த திரைப்படத்தின் ஊடாக அறிமுகமாகி, அதில் இவர் நடிப்பிற்கு கிடைத்த பட்டமே தலைவாசல் விஜய் என்ற பட்டம்.

தமிழ் சினிமாவில் ரஜனி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடனும் துணை நடிகராகவும், வில்லனாகவும் நடித்து 90ஸ் கிட்ஸ் இன் பேவரைட் நடிகராக இப்போதும் வலம் வருகிறார்.


இவர், மதுரைதமிழ், சென்னைதமிழ், தூத்துக்குடிதமிழ் , இலங்கைதமிழ் என பல பாணிகளில் தத்துருவமாக கதைக்க கூடியவர். 

இந்த நிலையில், இவர் அண்மையில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு கலைமாமணி விருது கிடைக்கவில்லை என மனம் வருந்தியுள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில்,  எனக்கு நிறைய அவார்ட்ஸ் கிடச்சு இருக்கு. ஆனா, ஸ்டேட் அவார்ட், கலைமாமணி விருது கூட எனக்கு கிடைக்கல. ஆனா நான் இன்னும் நல்ல நடிக்கணும் அப்படி என்று தான் நினைக்கிறேன். அத்துடன்  நடிகர்களுக்கு அங்கீகாரம் என்பது அவார்ட்கள் இல்லை பாராட்டுக்கள் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement