ஆர்ஜின் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக புதிய தமிழ் திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. தற்காலிகமாக Production No.1 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்குமார் ரங்கசாமி இயக்குகிறார்.
இந்த படம் காதலும் உறவுகளும் காலத்திற்கேற்ப எப்படி மாறுகின்றன என்பதையும், ஜெனரேஷன் ஆல்ஃபா இன்றைய இளம் தலைமுறையின் மனநிலையும் பேசுகிறது. “வேர்களிலிருந்து விலகி வளர்கிற இந்த தலைமுறைக்கு மீண்டும் வேர்களை நினைவூட்டும் ஒரு முயற்சிதான் இந்த படம்,” என்கிறார் இயக்குனர் ராஜ்குமார் ரங்கசாமி.
‘96’ படத்தின் ஜோடியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில், இயக்குநர் கே. பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர்களுடன் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர், சரஸ்வதி மேனன், சாய் ரமணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறுவதாவது, “சொல்ல வேண்டிய கதையென்று தோன்றிய இந்தக் கதையை தயாரிக்க முடிவு செய்தேன். இது ஆரம்பம் மட்டுமே. தொடர்ந்து தரமான படங்களை எங்கள் நிறுவனம் உருவாக்கும்.” இப்படம் இந்த ஆண்டுக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!