• Aug 27 2025

மீண்டும் கல்யாணம் பண்ணும் குமாரவேல்.. அதிர்ச்சியில் குடும்பம்.! டுடே எபிசொட்.!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் ராஜிக்கு ட்ரெயினிங் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பின் ராஜி கதிரைப் பார்த்து இண்டைக்கு ஒரு மாதிரி டயேட்டா இருக்கு என்கிறார். அதைக் கேட்ட கதிர் என்ன கிழவி மாதிரி சொல்லுற என்று கேட்கிறார். மேலும் இனிமேல் உன்ர டயேட்ட மாத்தோணும் என்கிறார். மறுபக்கம் இவங்க ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருக்கிறதைப் பார்த்த குமாரவேல் ரொம்பவே கவலைப்படுறார்.


இதனைத் தொடர்ந்து வடிவு குமாரைக் காணேல என்று சொல்லுறார். அதைக் கேட்ட சக்திவேல் குமாரை நினைச்சால் ரொம்ப பயமாகிடக்கு என்று சக்திவேல் கிட்ட சொல்லுறார். அதைக் கேட்ட சக்திவேலோட மனைவி ஏன் இப்புடி எல்லாம் பேசுறீங்க என்று கேட்கிறார். பின் இதுக்கெல்லாம் காரணம் அந்த பாண்டியனோட மகள் என்று கோபமாக சொல்லுறார் சக்திவேல்.

இதனை அடுத்து சக்திவேல் திரும்ப குமாருக்கு கல்யாணம் பண்ணி வைப்போம் என்கிறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் சக்திவேலோட அம்மா வேற பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு பதிலா அரசியை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்கிறார். அதைக் கேட்ட சக்திவேல் ரொம்பவே கோபப்படுறார். 


அதைத் தொடர்ந்து சுகன்யா ராஜியைப் பார்த்து உங்க வீட்டுக் கதை ஏதும் உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார். மேலும் உன்ர வீட்ட நினைத்து கஷ்டமா இல்லையா என்று கேட்கிறார் சுகன்யா. அதைக் கேட்ட ராஜி எனக்கும் கஷ்டமா தான் இருக்கு என்று சொல்லுறார். பின் ராஜி குமாரோட அம்மாவோட கதைச்சுக் கொண்டிருக்கிறார். அந்தநேரம் குமாரோட நிலைமையை பார்க்க பயமா இருக்கு என்று சொல்லி கதறி அழுகிறார் குமாரோட அம்மா. இதுதான் இன்றைய எபிசொட்.


Advertisement

Advertisement