தமிழ் சினிமாவில் சமூகச் சிந்தனைகளையும், உணர்வுமிக்க உரைகளையும் மையமாகக் கொண்டு உருவான திரைப்படங்களில் தனி அடையாளத்தை ஏற்படுத்திய படம் தான் "திரௌபதி". அந்த படத்தின் வெற்றிக்குப் பின், அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள “திரௌபதி 2” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் மோகன் ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ஆகியோர் மீண்டும் இணைந்து உருவாக்கும் இந்தப் பாகம், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக சமூகத்தை கடுமையாக சிந்திக்க வைக்கும் வகையில் உருவாகி வருகின்றது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியவுடன் சமூக வலைத்தளங்களில் பெரும் அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2020 ஆம் ஆண்டு வெளிவந்த “திரௌபதி” திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான சமூக அரசியல் கருத்துக்களை கொண்டு வந்த படமாக பெரும் கவனத்தைப் பெற்றது. சாதிய அரசியல்கள், தேர்தல் முறைகள் ஆகியவற்றை நேரடியாக கேள்விப்படுத்திய அந்தப் படம், விமர்சனங்கள் மற்றும் ஆதரவுகளால் சுழன்றது.
முன்னணி இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் "திரௌபதி 2", முதற்பாகத்தில் தொடங்கிய கேள்விகளை இன்னும் ஆழமாகக் கொண்டு செல்லும் படமாக அமைந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகர் ரிச்சர்ட், தீவிரமான தோற்றத்துடன், கண்களில் கோபம், நெஞ்சில் வலியுடன் பார்ப்பது போன்று காட்சியளிக்கிறார்.
Listen News!