• Dec 26 2024

அட பார்க்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கே..! மீனாக்கு நச்சென இச் கொடுத்த விஜயா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றது.


சிறகடிக்க ஆசை சீரியல் மூன்று இளம் ஜோடிகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பணக்கார மருமகளை மாமியார் கவனிக்கும் விதமும் ஏழை வீட்டு பெண்ணான மீனாவை படாத பாடு படுத்தும் விதம் பற்றியும் எடுத்துக்காட்டுகின்றது. ஆனாலும் மீனா மாமியாரின் கொடுமைகளை எல்லாம் தாண்டி பூமாலை கட்டி அதன் ஊடாக எப்படி முன்னுக்கு வருகின்றார் என்பதை அழகாக எடுத்துக்காட்டுகின்றது.

எனினும், விஜயா மீனாவை வைத்து கொடுமைப்படுத்தும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் எரிச்சலை ஊட்டுகின்றது. அத்துடன்  ரோகிணி பற்றிய உண்மைகள் இன்னும்  வெளிவராத காரணத்தினால் டைரக்டர் மீது கடும் கோபத்தில் காணப்படுகிறார்கள்.


மேலும் இந்த சீரியலில் முத்துவும் மீனாவும் சண்டை சச்சரவுகளுடன் இருந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஒருவர் எடுக்கும் முயற்சிகளுக்கு மற்றவர்  சப்போர்ட்டாக இருந்து வருகின்றார்கள். இதன் காரணத்தினால் இவர்களுடைய  கேரக்டர்கள் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்ததாக காணப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் மீனாவும் விஜயாவும் ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்கள் இதை பார்த்து ரசிகர்கள் இப்படியே சீரியலிலும் நடித்து இருக்கலாமே என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

Advertisement

Advertisement