தமிழில் வெளியான உதயகீதம் என்ற படத்தின் மூலம் திரையுலரில் அறிமுகமானவர்தான் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் திறமையான நடிகையாக இருந்த போதும் இவருக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சி நடிகையாக மாறினார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்த டிஸ்கோ சாந்தி, கணவரின் மறைவிற்கு பிறகு அவருடைய வாழ்க்கையே மொத்தமாக தலைகீழானதாக தெரிவித்து இருந்தார்.
தனது குடும்ப வறுமை காரணமாக ஏழு வயதிலேயே நடிக்க வந்துள்ளார் டிஸ்கோ சாந்தி. ஆரம்பத்தில் நாயகியாக நடித்து வந்த இவர் அதன்பிறகு ஐட்டம் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். பின்பு அதையே தனது கேரியராகவும் மாற்றிக் கொண்டுள்ளார்.
இதை தொடர்ந்து நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு மொத்தமாகவே சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்தோடு ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக டிஸ்கோ சாந்தியின் கணவர் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்தார்.
தனது கணவனின் மறைவை தாங்க முடியாத டிஸ்கோ சாந்தி, குடிக்கு அடிமையாகி மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டார். இதனால் தனது குழந்தைகளை கவனிக்க முடியாமல் தன்னிடம் இருந்த சொத்துக்களையும் விற்று வாழ்ந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருந்த சூழ்நிலையும் வந்துள்ளது. அதன் பின்பு தனது குழந்தைகள் நீயும் இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது என்று கேட்ட நிலையில் அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், டிஸ்கோ சாந்தியின் புதிய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் தனது கணவர் இறந்த பிறகு படையப்பா நீலாம்பரி போலவே கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் வீட்டில் அடைந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார். டிஸ்கோ சாந்தியின் இந்த நிலைமையை கேட்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
Listen News!