• Feb 25 2025

பாக்கியாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் குடும்பத்தார்..! சந்தோசத்தில் பாக்கியா!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசொட்டில் , பாக்கியா ஹோட்டலில் ஓடர் எடுத்துக் கொண்டிருக்கின்றா. அதோட தான் புதுசாக செய்த அசோகா அல்வாவை எப்படி இருக்குதுனு கேக்கிறார். பிறகு ஹோட்டலுக்கு லோன் காரர் வந்து பாக்கியவுடன் கதைத்துக் கொண்டிருக்கினம். அப்பத்தான் தன்ர பிறந்த நாள் வாறதே பாக்கியாவிற்கு தெரியவந்தது.

அதனை அடுத்து இனியாவுடன் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடப்போறதா கூறினார். அப்ப இனியா சாரி அம்மா நான் மறந்திட்டன் என்றார். அதுக்கு பாக்கியா பரவாயில்லடி என்ட பிறந்தநாளை நானே மறந்திட்டன் உனக்கு எப்புடி தெரியும் என்றார்.


பிறகு எல்லாரும் சேர்ந்து பிறந்தநாள் பற்றிய டிஸ்கஷனில் இருந்தார்கள். பின் தனக்கு நிறைய வேலை இருக்கு என்டு கூறிட்டு பாக்கியா சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி பாக்கியாவும் கோபியும் ஒண்ணா சேருவதற்காக விரதம் இருக்கப் போவதாக கூறுகின்றார். அதற்கு கோபி ஈஸ்வரிக்கு பேசுகிறார்.

பின் இனியா வந்து பாக்கியாவின் பிறந்தநாள் வருது தெரியுமோ என கோபியிடம் கேட்டார். அப்ப ஈஸ்வரி பாக்கியாவுக்கு என்னத்துக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் என்று கோவப்படுகின்றார். பின் பாக்கியா தனக்கு தேவையான சாறி வாங்கிகொண்டு வந்து ஈஸ்வரிக்கு பக்கத்தில் இருக்கிறார். அதனை அடுத்து பாக்கியா முன்னர் எல்லாம் என்னை ஒருத்தரும் மதித்ததில்லை என சோகமாக கதைத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement