• Dec 26 2024

தங்கமயில் பதட்டத்தால் மீண்டும் மீனாவுக்கு சந்தேகம்.. பாக்கியத்திற்கு கொடுத்த பதிலடி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நேற்றைய எபிசோடில் நகைகளை எல்லாம் அடகு வைக்க வேண்டும் என்ற ஐடியா சொல்லப்பட்டதும் தங்கமயில் பதட்டம் அடைந்தார் என்பதையும், அதை  மீனா கவனித்தார் என்பதையும் பார்த்தோம். இன்றைய எபிசோடில் அடகு வைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்ததும் தங்கமயில் பதட்டத்தில் இருந்த நிலையில் மீனா உடனே ’உங்கள் உடம்புக்கு என்ன? ஏன் பதட்டமாக இருக்கிறீர்கள்’ என்று கேட்க ’அதெல்லாம் ஒன்றும் இல்லை, நான் நன்றாக தான் இருக்கிறேன்’ என்று கூறி தங்கமயில் சமாளித்தார்.

அதன் அடகு வைக்கும் போது நகையை உரசுவார்களா என்று தங்கமயில் கேட்க அதற்கு பழனி ’ஆமாம் கண்டிப்பாக உரசுவார்கள் என்று கூற மீண்டும் தங்கமயில் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் பாண்டியன் நகைகளை எல்லாம் அடகு வைக்க வேண்டாம், கோமதி லாக்கரில் இருக்கட்டும்  என்று கூறிவிட்டு சென்ற பிறகுதான் தங்க மயிலுக்கு ஓரளவுக்கு நிம்மதி வந்தது.
தங்கமயில் பதட்டத்தையும் அதன் பிறகு அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும் மீனா கவனித்துக் கொண்டதை அடுத்து அவருக்கு மீண்டும் சந்தேகம் வந்துள்ளது. இதனை அடுத்து செந்தில் மற்றும் மீனா ஆகிய இருவரும் சென்னைக்கு செல்ல பாண்டியன் சம்மதம் அளித்ததை அடுத்து மீனா தனது அத்தை கோமதிக்கு நன்றி தெரிவித்தார்.

 இந்த நிலையில் மறுநாள் நகைகள் எல்லாம் லாக்கரில் வைப்பதற்காக கோமதி மற்றும் ராஜி கிளம்பி கொண்டிருந்த நிலையில் தங்கமயில் அம்மா பாக்கியம் வருகிறார். அவர் வந்தவுடன் ’நீங்கள் எங்கே வெளியே கிளம்பி கொண்டிருக்கிறீர்கள், தாராளமாக சென்று வாருங்கள், நீங்கள் வரும் வரை நான் இருக்கிறேன்’ என்று பாக்கியம் கூற, தங்கமயில் மீண்டும் டென்ஷன் அடைகிறார் .

அவர்கள் போன பிறகு நகைகள் எல்லாம் லாக்கரில் வைக்கப் போகிறார்கள் என்றதும் பாக்கியம் அதிர்ச்சி அடைந்தாலும், ‘பயப்படாதே நான் பார்த்துக் கொள்கிறேன், லாக்கரில் தானே இருக்கிறது’ என்று கூறி ஆறுதல் கூறினார். இதனை அடுத்து நகைகளை லாக்கரில் வைத்து விட்டு கோமதி, ராஜி மற்றும் மீனா வரும் நிலையில் மீனாவை பாக்கியம் கிண்டல் செய்ய, அதற்கு மீனா பதிலடி கொடுக்கிறார்.

இந்த நிலையில் செந்தில் சென்னைக்கு போகப்போகும் சந்தோஷத்தில் இருக்கும் நிலையில் திடீரென இடியாக பாண்டியன் சென்னையில் சில வேலைகளை செய் என்று சொல்ல, இதனால் செந்தில் அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement