• Dec 26 2024

ஷோவில பங்குபற்றினால் தான் நம்மளோட ஒரிஜினல் காரெக்டரே தெரியுது- ஓபனாகப் பேசிய விசித்ரா

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக இருந்தவர்கள் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் கவர்ச்சி நடிகை விசித்ராவும் ஒருவர்.

 15 வயது ஆகும்போதே சினிமாவில் நுழைந்து விட்டார். ஆரம்ப காலத்தில் துணை நடிகராக களத்தில் இறங்கிய இவர். பின்வரும் நாட்களில் கதாநாயகி, வில்லி, டான்சர், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார்.


 அதனை தொடர்ந்து பிரபல நிகழ்ச்சிக்கான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.இந்நிலையில் சமீபத்தில் அவரது நிலை குறித்து பேட்டி ஒன்றில் தெளிவாக எடுத்துரைத்தார்.

95 நாட்களுக்கு மேலாக கடும் போட்டிகளை விளையாடி மக்களின் மனதையும் வென்று வந்தவர் கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார்.பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவருக்கு அவரது உறவினர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் அவர் பேட்டி ஒன்றில் கதைக்கும் பொழுது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய காட்சி தற்பொழுது வைரலாகி வருகின்றது.அதாவது,நடிகையாக இருக்கிறது ரொம்ப கஷ்டம் , எங்களுடைய ஒரிஜனல் காரெக்டர் என்ன எப்பிடி சமைப்போம் என்பதெல்லாம் ஒரு ஷோவில பங்குபற்றினால் தான் தெரியும் என்று கூறியுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement