• Mar 09 2025

திரையரங்குகளில் குவியும் மக்கள்...! பாக்ஸ் ஆபிஸில் வசூலுக்கு பஞ்சமில்லை!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இன்று  ஒரே நாளில் எட்டு புதிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்துடன் திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அந்தவகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜி.வி.பிரகாஷின் "கிங்ஸ்டன்", ஜோகி பாபுவின் "லெக் பீஸ்", லாஸ்லியாவின் "ஜெண்டில்வுமன்", ரிஜோவின் "நிறம் மாறும் உலகில்", விமலின் "படவா", மர்மர், அம்பி மற்றும் ஏமகாதகி ஆகிய படங்கள் இன்று வெள்ளித்திரையில் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ளன. அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் தனது "கிங்ஸ்டன்" படத்தில் மாஸான கதாபாத்திரத்தில் அசத்தி உள்ளார். மற்றொரு பக்கம் ரசிகர்களை தனது நகைச்சுவையால் கவர்ந்துவரும் ஜோகி பாபுவின் "லெக் பீஸ்" படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இத்தகைய படங்கள் அனைத்தும் ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் என இரண்டும் கலந்த சூப்பர்ஹிட் மாஸ் படங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, லாஸ்லியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த "ஜெண்டில்வுமன்" பெண்களை மையப்படுத்தப்பட்ட ஒரு தீவிரமான சமூக படமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஒரே நாளில் எட்டு படங்கள் திரைக்கு வருவது மிகவும் அரிது. இதில் அனைத்து படங்களுமே வேறுபட்ட கதைகளுடன் வந்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அத்துடன் திரையரங்குகளில் ஏற்கனவே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து படங்களை ரசிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement